search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள் தினம்"

    • சைக்கிள்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
    • சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து சமுதாயத்தை முன்னேற்ற பாடுபட வேண்டும் என சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பேசினார்.

    வீ. கே. புதூர்:

    மிதிவண்டி தினம் மற்றும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்காசி அரசு ஐடிஐ மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    பேரணியை தென்காசி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜு முன்னிலை வகித்தார். பேரணி தென்காசி அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் இருந்து குத்துக்கல்வலசைவரை சென்று மீண்டும் அரசு தொழிற்பயிற்சி வளாகத்தை 8 கிலோமீட்டர் வரை சென்று வந்தடைந்தது.

    பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களின் சைக்கிள்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் மிதிவண்டி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

    மாணவர்களிடையே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் பேசும்போது, மாணவர்கள் மிகச் சிறந்த கல்வி கற்று சமுதாயத்துக்கு பல்வேறு அரிய பணிகள் ஆற்றிட வேண்டும்.

    குறிப்பாக சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒற்றுமையாக கல்வி கற்று தங்கள் குடும்பத்தையும் சமுதாயத்தையும் முன்னேற்ற பாடுபட வேண்டும்.

    மேலும் சாதிய ரீதியிலான எவ்வித உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் செந்தில் ராஜு ,உதவி பயிற்சி அலுவலர் சேகர், இளநிலை பயிற்சி அலுவலர் கமல கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×